ராட்சசி கட்டாயம் பார்க்க வேண்டும் … மலேசிய கல்வி அமைச்சர் புகழாரம் ..!!

ஜோதிகா நடித்த ராட்சசி படத்திற்கு மலேசிய கல்வி அமைச்சர்  மஸ்லி மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார் .

கவுதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “ராட்சசி”. மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 5ந்தேதி வெளியானது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு படைக்கவில்லை. இந்நிலையில்,  “ராட்சசி” படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இப்படத்திற்கு தன் சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Image result for ratchasi movie

அவர் ,  2 மாதங்களுக்கு முன்பு  இந்த படம் வெளியானது என்றும் நேற்று இரவுதான்  இந்த படத்தை அதிகாரிகளோடு பார்த்தேன் என்றும் கூறினார். மேலும் , இப்படத்தைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுவேன் என்றும் கண்டிப்பாக இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் இதிலுள்ள கதையும், கதாபாத்திரங்களும் அற்புதமாக உள்ளது எனவும் கல்வி அமைச்சராக இந்த படத்தை பார்ப்பது வித்தியாசமான உணர்வை தருவதாகவும் கூறினார்.

Image result for maslimalik

இப்படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியும் நம் நாட்டின் சூழலோடு பொருத்திப் பார்க்கும் படியாகவும், நாம் செய்ய வேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் இந்த படத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் , அதில் உதாரணமாக இலவச காலை உணவுத் திட்டமும், உணவை தாண்டிய சில விஷயங்களை பற்றிய எனது எண்ணங்களையம் இந்த படம் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

Image result for ratchasi movie

இதுமட்டுமின்றி, பள்ளி குழந்தைகளோடு ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் குழந்தைகள் படிப்பு தடைப்படாமல் இருக்க அனைத்து மூலைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்  விரும்புகிறேன் என்றும் கல்வியை வளர்ப்பதே அனைத்து கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய பெரிய விருப்பம் எனக் கூறியுள்ளார்.

Image result for ratchasi movie

மேலும்,  ஒரு சமூகத்தின் இலக்காகவும் திட்டமாகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் கல்விதான் உதவும் என்றும் அனைத்து கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இந்த படத்தை விரைந்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன் என்றும் மலேசியக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.