மீண்டும் நடிப்பை தொடரும் மாளவிகா..!!

 நான் நடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று பிரபல நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார். 

தல அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா . இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்… என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.மேலும் ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது எனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

Image result for நடிகை மாளவிகா

இது குறித்து இவர் கூறுகையில் “தமிழில் நல்ல நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரத்தில்  நடித்திருந்தேன். பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும்  எனக்கு ஆதரவு அளித்தார்கள். எனது சினிமா வாழ்வில் வாளமீன் பாடல் பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தியது.  கல்யாணத்திற்கு பின் குடும்பத்தை கவனித்ததில் நடிப்பை தொடரமுடியவில்லை.இப்போது      எனக்கு நடிக்க ஆர்வமும் அதற்கான நேரமும் வந்துள்ளது. இரண்டு வாய்ப்பு கேட்டுள்ளேன்  கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார் .