மளமளவென எரிந்த தீ…. தடுத்து நிறுத்திய தீயணைப்பு துறை வீரர்கள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

கூத்தாநல்லூர் அருகில் தீ விபத்து ஏற்பட்டு மூங்கில் மரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விழல்கோட்டகம் கிராமம் கோரையாற்றின் கரையோரத்தில் மூங்கில் தோப்பு இருக்கின்றது. இந்த தோப்பில் திடீரென தீப்பற்றி மூங்கில் மரங்கள் மளமளவென எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாயின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *