இரவு முழுவதும் பெய்த மழை…. சேதமான நெற்பயிர்கள்…. வேதனையில் வாடும் விவசாயிகள்…!!

மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து விட்டது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

இதனை அடுத்து அறுவடை செய்த பயிர்களை விவசாயிகள் தார்பாய் போட்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *