மக்களின் மீது குண்டு மழை பொழிந்த மியன்மர் ராணுவம்…. தாய்லாந்திற்கு தப்பி ஓட்டய மக்கள் ….!!!

மியன்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அவர்களின் மீது இரக்கம் காட்டாமல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர்.

மியன்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து ராணுவம் தனது ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகையால் இதனை எதிர்த்து போராடி வந்த மக்களின் மீது அடக்குமுறை என்ற பெயரில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை குருவியைப் போல் சுட்டுத் தள்ளினர். இதில் 114 போராட்டக்காரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.  ராணுவ ஆட்சிக்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும் எனவே இதனை குறித்து சர்வதேச அளவில் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வந்தது.

மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஐ.நா பொதுசபையும் மியன்மாரில் நடந்துவரும் ராணுவ ஆட்சியின் வன்முறையை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து மியன்மரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செயின் மாகாணத்தில் கரேன் இன  மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் 70 ஆண்டுகளாக சுயாட்சி கோரி மியான்மர்  அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் தற்போது நடந்து வரும் ராணுவ ஆட்சியை கண்டித்தும் கரேன் இன மக்கள் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வந்த நிலையில் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய “கரேன் தேசிய விடுதலை ராணுவம் ” கொரில்லா படை ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத மோதல் தாக்குதலை தீவிரப்படுத்துகின்றனர். ராணுவ ஆட்சியை எதிர்க்கும் போராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வரும் ராணுவம்  கரேன் இன மக்களையும் தாக்குவதற்க முடிவு எடுத்துள்ளது.

அதன்படி செயின் மாகாணத்தில் தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள முட்ரா  மாவட்டத்தில் விமானங்களைக் கொண்டு வான் தாக்குதலை தொடங்கியது.  மியான்மர் தாய்லாந்து எல்லையில் சால்வின் ஆறு பகுதிகளிலுள்ள மக்களின் மீது நேற்று முன்தினம் இரவு தொடங்கிய விமானங்களின் குண்டு மழை காலை வரை தொடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளனர். மேலும் இந்த குண்டு வீச்சில் உயிரிழந்தவர்கள்  குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆகையால் இந்த ராணுவ ஆட்சியின் குண்டு வீச்சால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் சால்வின் ஆற்றை கடந்து தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் மே  சான் மாகாணத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும்  கூறியுள்ளனர். தற்போது வரை 3 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் மியன்மரில் இருந்து தாய்லாந்திற்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வந்துள்ளதாக தாய்லாந்து தரப்பிலிருந்து தகவல் வெளியிட்டுள்ளனர்.