மக்களே என்னை பாராட்டுறாங்க… நமது வாகனம் படகாகிறது… கமல்ஹாசன் அதிரடி டுவிட்…!!!

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  முதல் முறையாக  ஓட்டு கேட்டு வந்த தலைவர் நீங்கள்தான் என்று மக்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார் .

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரத்தை ஆரம்பித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொண்டு வருகிறார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.கமல்ஹாசன் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், இதுவரை ஓட்டுகளை வாங்க வந்த அரசியல்வாதிகளை தான் பார்த்திருக்கிறோம்.

முதன்முதலில் “ஓட்டு கேட்டு” வந்தவர் நீங்கள் தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள். செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது . நமது வாகனம் படகாகிறது.” சீரமைப்போம்  தமிழகத்தை” என்று பதிவிட்டிருந்தார்.