தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ். இந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன், கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் மற்றும் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நெக்ஸ்ட் பக்கத்தில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிக் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையிலும் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம். எங்களது ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.