அனைவருக்கும் தங்க நகைகள் என்றால் கொள்ளை பிரியமாக இருக்கும். அது அழகு சார்ந்த அணிகலன்களாக மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கு ஒரு சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகைய தங்கத்துடன் வெள்ளி, கவரிங் நகைகளை சேர்த்து அணிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் இப்படி அணிவதை தவிர்ப்பதன் மூலம் தங்கத்தின் தரத்தை பாதுகாக்கலாம். பொதுவாக ஆபரணம் அதிகமாக ஏதேனும் ஒரு பொருளுடன் குறையும் போது ஏற்படும் இழப்பே தேய்மானம் எனப்படுகிறது.
இதனால் ஆபரணம் உராய்வதை தவிர்ப்பது அவசியம். 24 கேரட் தங்கம் மென்மையானதாக இருக்கும். வெள்ளி ஆபரணங்கள் அதிக தேய்மானத்தை தரலாம். 24 கேரட் தங்கத்தில் பதினொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் செம்பு மற்றும் துத்தநாகம் இரண்டும் கலந்து அதன் மென்மை குறைந்து 22 கேரட் தங்கமாக மாற்றி அவை நகை செய்ய பயன்படுத்தப்படுகிறது. எனவே தேய்மானம் குறைவு. பொதுவாக வெள்ளி நகைகள் கனமாக இருக்கும். இதனாலேயே அனைத்தையும் சேர்த்து போடக்கூடாது என சொல்லப்படுகிறது. இதேபோல் தரமான திரவியங்கள் நகைகளின் மீது படக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.