“வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்” பிரதமர் மோடி ட்விட்..!!

பிரதமர் மோடி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for பிரதமர் மோடி

இந்நிலையில் மீண்டும் பாஜக தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. அதே போல தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கவுள்ள பாஜக இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜக வெற்றி உறுதியாகிள்ள நிலையில் பல்வேறு தலைவர்கள் பாஜக_வுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெற்றி உறுதியாகிவிடும் நிலையில் பிரதமர் மோடி “ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.