“75-வது சுதந்திர தினம்” தேசத் தந்தையின் அரிய புகைப்படங்கள்…. மக்களுக்காக பிரத்யேக கண்காட்சி….!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசத் தந்தையின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி புதுச்சேரியில் நடைபெறகிறது

75-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது இதனை முன்னிட்டு பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் Jaycees of Pondicherry இணைந்து மகாத்மா காந்தியை போற்றும் விதமாக அவரின் 150க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை நடத்துகிறது. இதில் மகாத்மா காந்தியின் மக்கள் எழுச்சி, வாழ்க்கை போராட்டம், தியாகம் போன்றவற்றை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் அமைந்துள்ளது.

புதுவை காமராஜர் வீதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் ராயல் பார்க்கில் நடைபெறவிருக்கும் இந்த புகைப்பட கண்காட்சியை காந்தியவாதி ராமகிருஷ்ணன், JCI இந்தியாவின் தேசிய தலைவர் JCI SEN ராக்கி ஜெயின், புதுச்சேரி அரசின் பொதுப் பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் போன்றோர் கலந்து கொண்டு துவக்கி வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வைத்திருக்கும் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றின் அரிய வகையான புகைப்படங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *