மகாராஷ்டிரா ஊரடங்கால்…வான்கடேவில் நடக்கும் போட்டிகளுக்கு…இடையூறு இருக்காது பிசிசிஐ தகவல் …!!!

மகாராஷ்டிராவின் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ,மும்பையில்  நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு, இடையூறு இருக்காது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2021 ம்  ஆண்டு ஐபிஎல் தொடரானது வருகின்ற 9ம் தேதி ,தொடங்க உள்ளது. இதற்காக  6 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் தொடர்கள் நடைபெற உள்ளன. அந்த 6 மைதானங்களை ஒன்றான மும்பை வான்கடே  மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது.

தற்போது மகாராஷ்டிரா விதித்த இரவு நேர ஊரடங்கால் , ஐபிஎல் போட்டிக்கு சிக்கல்கள் ஏற்படும் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிசிசிஐ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் பயோ- செக்யூர் வளையத்தில் இருப்பதாலும், வீரர்கள் மட்டுமல்லாது இந்த ஐபிஎல் தொடரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். இதனால் மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கு எந்த ஊரு இடையூறும் ஏற்படாது என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.