மகாராஷ்டிராவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தானே மாவட்டத்தின் விமாண்டி என்ற பகுதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டிடம் ஒன்றில் 3:30 இடிந்து விழுந்தது. பெருத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழ தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதுவரை 8 பேர் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளனர். 20 முதல் 25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களமிறங்கியுள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தில் 21 குடியிருப்புகள் இருப்பதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கட்டிடம் இடிந்து விழுந்தது எப்படி என்பது குறித்த விசாரணையை அப்பகுதி போலீசார் தொடங்கியுள்ளனர்.