மஹாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு …!!

மஹாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அதிகளவில் கொரோனா மாநிலமான மஹாராஷ்டிராவில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 122 பேருக்கு கொரோனா நொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 124 அதிகரித்துள்ளது. அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4ஆக உயர்ந்தது. 24 ஆம் தேதி இறந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *