உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகின்றது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பங்கேற்றார். இதில் பங்கேற்றுக் கொண்ட அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

அதோடு பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் அவர் செய்தார் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் கலந்துக்கொண்டு புனித நீராடியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கடந்த மாதம் 29ம் தேதி மவுனி அம்மாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. அதோடு இதில் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.