மகரம் ராசிக்கு….! நிம்மதி ஏற்படும்….! பிரச்சனைகள் இருக்காது….!!

மகரம் ராசி அன்பர்களே.! இறைவனின் அருளால் காரியத்தில் வெற்றி ஏற்படும்.

குழப்பங்கள் கண்டிப்பாக தீர்ந்துவிடும். நேற்றைய பிரச்சனைகளுக்கு இன்று தீர்வுகள் கிடைக்கும். மனம் இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எடுத்த முடிவுகளில் தெளிவாக இருப்பீர்கள். எதிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் தொய்வு இருக்கும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டியிருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு வீண் அலைச்சல் இருக்கும். சிக்கல்களை தைரியமாக அணுகுவீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். இறைவனின் அருளால் காரியத்தில் வெற்றி ஏற்படும். மனதில் நிம்மதி இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். மனம் தளராமல் எதிலும் ஈடுபட வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிந்தனை மிகுந்து காணப்படும். இந்த காதல் நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். காதலின் நிலைபாடுகள் கொஞ்சம் வியக்கும் வகையில் இருக்கும். புரிந்து கொண்டு நடந்து கொண்டால் எல்லாம் சிறப்பை கொடுக்கும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வியில் உயர்வு காண முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *