மகரம் ராசிக்கு….! நம்பிக்கை கூடும்….! வெற்றி கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! மனதிற்கு பிடித்தவரை சந்திக்க நேரிடும்.

இன்று உங்களுடைய சிரமங்களை தயவுசெய்து யாரிடமும் சொல்ல வேண்டாம். எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருந்தாலும் மனதில் போட்டு புதைத்து கொள்வது நல்லது. சில நபர்கள் அதனை கேலி கிண்டல் பேச்சுகளுக்கு உள்ளாக்குவார்கள். அதனால் நீங்கள் கஷ்டப்படுவீர்கள். ஆனால் மற்றவர்களுக்கு அது சிரிப்பாக இருக்கும். கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும். உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் உதவிகள் செய்பவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் குறை சொன்னாலும் காயப்படுத்த மாட்டீர்கள். நல்லவரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. பணவரவு சீராகும். சிலருக்கு வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகள் எல்லாம் கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் விலகி செல்லும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்க நேரிடும்.

மனதார எதையும் செய்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். காதல் விவகாரங்கள் மனதை கொஞ்சம் காயப்படுத்தினாலும் இறுதியில் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில் வியாபாரம் பற்றிய கவலைகளை அதிகமாக இருக்கும். அதனை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். சோர்வில்லாமல் எப்பொழுதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாசப்பயணம் செல்லலாமா என்ற எண்ணங்கள் இருக்கும். சமூக பொறுப்புகள் கூடும். பெண்களுக்கு கையில் காசு பணம் புரளும். மாணவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். மேல் கல்வியில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். சிறு முயற்சி எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் வெள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *