மகரம் ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! மனஸ்தாபங்கள் ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! வழக்கு விவகாரங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.

இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவடையும் நாளாக இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். இன்று உங்களுடைய குணமறிந்து மற்றவர்கள் நடந்து கொள்ளக் கூடும். தாய் வழி உறவுகள் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மாமன் மைத்துனன் வகையில் உதவிகள் கிடைக்கும்.இன்று முன்பின் யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி இருக்கும். எதையும் நிதானமாக பேசி வென்று விடுவீர்கள். மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அதனை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். வழக்கத்தைவிட செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுக்களின் போதும் மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேர்ந்துவிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைச்சல் இருக்கும். அலைச்சல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.

தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட்டு முடிவை எடுக்க வேண்டாம். குடும்ப முன்னேற்றம் கருதி சில முடிவுகள் எடுக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் சீரான முடிவுகள் இருக்கும். காதல் விவகாரங்கள் மாற்றத்தை கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தாது. காதல் கண்டிப்பாக வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். கல்வி மீது அக்கறை இருக்கும். மாணவர்களுக்கு சாதிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். மாணவர்கள் தைரியமாக சில முடிவுகளை எடுக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 9                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *