மகளிர் உலகக்கோப்பை 2022 : பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா …!!!

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 104 ரன்களும், யஷ்திகா பாட்டியா 58 ரன்களும் குவித்தனர்.தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்க காக்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்பிறகு 245 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு  தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை தக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால்  2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *