மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ….கேப்டன் மிதாலி ராஜ் ….!!!

இந்திய மகளிர் அணியின்  கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில்  20ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து உள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக அவர் தனது 5-வது அரைசதத்தை அடித்துள்ளார் .

அதோடு சர்வதேச கிரிக்கெட் தொடரில் 20 ஆயிரம் ரன்களை அவர் பூர்த்தி செய்து உள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி ராஜ் தொடர்ந்து விளையாடி வருகிறார் .அதுமட்டுமின்றி மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்று மாபெரும் உலக சாதனையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.இந்நிலையில் தற்போது 20 ஆயிரம் ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *