1 நாள் கூட இருக்க முடியாது…… இறந்த 30-வது நாளில்…… மனைவியை போலவே அச்சு அசல் சிலை வடித்த தொழிலதிபர்…..!!

மதுரையில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவி இறந்த முப்பதாவது நாளில் அவரை போலவே தத்துரூபமாக சிலை ஒன்றை உருவாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்னும் பிரபல தொழிலதிபர். அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவர் மனைவி பிச்சைமணி அம்மாள் என்றால் அவ்வளவு பிரியம். இந்நிலையில் இவரது மனைவி கடந்த 30 நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று உடல் நலக்குறைவால்  இறந்து போனார்.

மனைவியின் பிரிவால் மிகவும் நொந்து போயிருந்த தொழிலதிபர், மனைவியை காணாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்பதை உணர்ந்து, மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியரான மதுரை மருது ஆகியோரின் உதவியுடன் அவரது மனைவியைப் போலவே தத்ரூபமாக இருக்கக்கூடிய 6*3 என்ற உயரத்தில் சிலை ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை அவர் தனது மனைவி இறந்த 30ஆவது நாளில் சரியாக உருவாக்கி முடித்து அந்த சிலையை வைத்து உற்றார் உறவினருடன் வழிபாடு செய்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *