இரவு 8 மணியோடு நிறைவடைந்தது மதுரை மக்களவை வாக்குப்பதிவு….!!

வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த  புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை 6 மணிவரை சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் , மக்களவை தேர்தலில்  69.55% வாக்குப்பதிவும்  பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மதுரை மக்களவை தொகுதிக்கு கள்ளர் திருவிழா_வையடுத்து கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் என்ற நிலையில் தற்போது 8 மணியுடன் மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.