தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக்காணி ரேஷன் கடை அருகில் மது விற்று கொண்டிருந்த கொட்டாரக்குறிச்சி பகுதியில் வசிக்கும் சின்னராஜா, செல்வம், சரவணகுமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து தலைவன்வடலி பகுதியில் மது விற்ற பழனிமுருகன், சந்தன மகாராஜன் ஆகியோரையும், கீரனூர் பேருந்து நிலையம் அருகில் மது விற்ற காயல்பட்டினம் நகரில் வசிக்கும் திருமுருகன் மற்றும் ஆத்தூர்பாலம் பகுதியில் மது விற்ற பச்சைவேல் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த மொத்தம் 84 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *