அரைகுறை ஆடையுடன் கிடந்த பெண்…. சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு…!!

அழகு நிலையம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மண்டல குழு முன்னாள் தலைவரான நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஷ் மண்டல் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பிரதாப் என்பவரை தனது கணவர் என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த பெண் 3 பகுதிகளில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நடேசனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட பிரதாப் தான் சென்னையில் இருப்பதாகவும், கடந்த 4 நாட்களாக தேஷ் மண்டல் தனது அழைப்பை ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடேசன் அங்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்ததோடு, அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த கருப்பு கலர் சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது சூட்கேசுக்குள் அரைகுறை ஆடையுடன் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் தேஷ் மண்டல் சடலமாக இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாற்றுத்திறனாளி பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *