பிரிந்த தம்பதியினர்… “மாற்றுத்திறனாளி மகனை” பராமரிக்க முடியாததால்… தந்தை செய்த கொடூர செயல்….!!

பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல்  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும்  அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு  ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் கை கால்கள் செயலிழந்துள்ளது.

இதன் காரணமாக  செல்வராணி  கோபியை  கடந்த 9 வருடங்களாக பராமரித்து வந்தார். அவர்  கோபியை குளிப்பாட்டுவது உணவு கொடுப்பது மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க உதவி செய்வது போன்ற எல்லா வேலைகளையும்  செய்து கோபியை கவனித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கவேலுக்கும் செல்வராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வராணி கணவர்  வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே கடந்த சில நாட்களாகவே மகன் கோபியை  பராமரிக்கும் வேலையை தங்கவேல் செய்து வந்தார்.

ஆனால் அவரை  பராமரிப்பதில் தங்கவேலுக்கு ஈடுபாடு இல்லை. மிகவும் சலிப்பு மற்றும் எரிச்சலுடனே பராமரித்து வந்தார். ஒரு கட்டத்தில் எரிச்சலின் உச்சத்திற்கே சென்ற தங்கவேல் மகன் கோபியை தரதரவென்று வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து கோபியின்  தலையை அரிவாளால் வெட்டி அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் கோபியை போட்டு சிமெண்ட் பலகை கொண்டு தொட்டியை மூடிவிட்டு அங்கிருந்து  தலைமறைவாகிவிட்டார். நேரம் செல்ல செல்ல தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளனர் அப்போது தொட்டிக்குள் கோபியின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை குறித்து  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  கோபியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த தங்கவேலை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து அவரிடம்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது மகனை பராமரிக்க முடியாததால் தன்னுடைய காலத்திற்கு பின்பு மகனின்  நிலைமை என்னவாகும் என்று நினைத்து மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து முடிவு கொள்ள முடிவு எடுத்ததாகவும் அவர் கூறினார்.