தனக்கு பிடித்ததை செய்ய, பார்த்த வேலையை விட்டு வந்த ஒரு இளம் பெண்ணின் கதை தற்போது இணையத்தில் உலா வருகிறது. டெல்லியை சேர்ந்த சர்மிஸ்தா கோஸ், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல சம்பளத்தில் மிகப்பெரிய இடத்தில் வேலை பார்த்து வந்தாலும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது.
அதனால் இவர் சொந்தமாக சிறிய அளவில் ஒரு டீக்கடை தொடங்கியுள்ளார். தன்னுடைய சொந்த தொழிலுக்காக தான் பார்த்து வந்த பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை அவர் தற்போது விட்டு விட்டார். இவரின் டீக்கடையில் தற்போது நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.