காதலியை காணத் துடிக்கும் காதலன்..!!

எனக்கு எல்லாமே நீதான்… உனக்கு எல்லாமே நான் தான்…. உந்தன் நினைவுகள், என் மனதுக்குள் நுழையும் போது…. என் நினைவுகள், உன் மனதுக்குள் நுழையும் போது…. உச்சரிக்கப்படும் வார்த்தை “காதல்” ஏற்பட்ட காதலில் உதயமானது நம் “தேடல்”… தேடிக்கொண்டிருக்கின்றேன், திருடப் பட்ட என் இதயத்தை…. தேடிக் கொடுப்பாய் என்னுள் புதைந்துள்ள உன் உருவத்தை…. உருவங்களோ இரண்டு, உணரப்பட்ட நம் காதலோ ஒன்று…. என்னை சந்திக்க விடுவாயோ…? என நான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்…. உன்னை சந்திக்க விடு, உன் முகம் காண ஒரு சந்தர்ப்பம் கொடு… ஏங்குகின்ற உன் காதலுக்கு, தேற்றுக்கின்ற உன் அன்பை கொடு… உன்னைக் காணத்துடிக்கும் காதலன்…. .