“உயிருக்கு ஆபத்து இருக்கிறது”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியகுமார்(22) என்ற மகன் உள்ளார். இவரும் புகழேந்தி(21) என்ற இளம்பெண்ணும் கல்லூரியில் படித்த போது பழகி காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இளம் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காதலர்கள் தெரிவித்தனர். இதனால் போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.