எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் குமாரவேலும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கீரமங்கலம் சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு காதலர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் காதலர்களை உங்கள் விருப்பப்படி சேர்ந்து வாழலாம் என கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.