ஈரோடு மாவட்டத்திலுள்ள கண்ணங்காட்டு பாளையத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிபிரசாத் திருப்பூரில் இருக்கும் கம்பெனியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் அஞ்சலியும், ஹரிபிரசாத்தும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 19-ஆம் தேதி திட்டமாலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.