லவ் டுடே என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகர் பார்த்திபன் தன்னை லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக பிரதீப் ரங்கநாதன் பலிவாங்கியுள்ளதாக பகிர் தகவலை கூறி இருக்கிறார்.
அதாவது கோமாளி படத்தின்போது தான் பஞ்சாயத்து பண்ணியதாகவும் அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் தன்னை சீண்டும் வகையில்தான் லவ் டுடே படத்தில் டயலாக் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அதாவது அப்படத்தில் பக்காவா பேசிட்டு இருந்த நீ பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியே என்ற டயலாக் இடம்பெற்றிருந்தது. இந்த டயலாக் மூலம் பிரதீப் ரங்கநாதன் தன்னை பழிவாங்கி விட்டார் என அவர் கூறியிருக்கிறார்.