“தந்தைக்கு தெரிய வந்த காதல் விவகாரம்” காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட காதலன்…. கைது செய்த போலீஸ்….!!!

காதலியின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வாலிபர் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள கடம்பன் குறிச்சியில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வருகின்றார். இவர் கரூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பற்றி மாணவியின் தந்தைக்கு தெரிந்து விட்டது. எனவே அவர் ஜெயசூர்யாவை  கண்டித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ஜெயக்குமார் காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார்.

அப்போது ஜெயக்குமாரின் உறவினர்களான ஐயப்பன், செல்வகுமார் ஆகியோர் மாணவியின் தந்தையை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை மாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தமான 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *