காதல் திருமணம்….”சில நிமிடத்தில் மரணம்”…. ஜோடியாய் மாண்டு போன துயரம்…!!

அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நிமிடத்தில் தம்பதிகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ஹார்லி மோர்கன் , பவுட்ரியாக்ஸ். இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து இரு வீட்டார்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்தனர்.பின்னர் புதிய வாழ்க்கை தொடங்க சென்ற அந்த தம்பதிகள் குடும்பத்தினர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image result for Harley Morgan and Rhiannon Boudreaux: Newlyweds Killed in Crash

திருமணம் முடிந்து வெளியில் நின்ற காரில் ஏறி இருவரும் வீட்டிற்கு கிளம்பும் போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணம் முடிந்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் திருமணமான ஜோடி உறவினர்கள் கண் முன்னே உயிரிழந்தது அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.