காதல் கடவுள் கொடுக்கும் வரம் ..

கனவில் வந்தவனே என்னவனே!!கனவில் வந்தவன் போல் வாழ்க்கை துணை அமைய வேண்டுகிறாள் கடவுளிடம் கடைசியில் அவனே தன் காதலனாக வர இருவரும் காதலில் இணைந்து ஒருவருக்கொருவர் தன்னுடைய துக்கம் சந்தோசம் கவலை கஷ்டம் எல்லாவற்றையும் பகிர்கிறார்கள்

இருவரும் வாழ்க்கையில் நிறைய இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள் அதனால் என்னவோ!! கடவுள் இவர்களை முடித்து போட்டுள்ளார்இருவரும் பார்வையில் பேசிக்கொள்கிறார்கள் அவள் தன் குடும்பத்துடன் அவனைப் பற்றி சொல்லி அவள் சம்மதத்தோடு இணைகிறார்கள்

அவள் அவனுக்கு காதல் பரிசு கொடுக்க முடிவு செய்கிறாள் அவனைக் கூட்டிக்கொண்டு மோதிரம் வாங்க செல்கிறாள்அவள் வீட்டிற்கு செல்ல பேருந்தில் அமர்ந்திருக்கும் பொழுது அவன் வர தூரத்தில் அவன் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தான்.

அவளோ தன் கண்களால் இவனை தன்னருகில் உட்கார அழைத்தாள்.அவனோ நல்லவன் போல் வேண்டாம் என கூற அவள் முகம் வாடியது.சிறிது நேரத்திற்குப் பின்,நல்லவனே அருகில் வந்து உட்கார அவள் கையோடு தன் கையை இணைக்கிறான் அன்று முதல் இருவரும் ஒன்றாகிறார்கள்.

இரு மனமும் படபடக்க அவனோ ஜுரத்தில் கிடக்கிறான்பயணம் என்பது இருவருக்கும் பிடித்தமான ஒன்று சில நாட்களுக்கு பிறகு காதலர் தினம் அன்று அவன் பரிசாக முத்தத்தை அவளுக்கு கொடுக்க அவளோ வெட்கத்தில் சிரிக்கிறாள்.

பல பிரச்சனை வாழ்க்கையில் நடந்தாலும் எதையும் நினைக்காமல் அவர்கள் காதல் அதிகரித்துக்கொண்டே தொடர்ந்து கொண்டே இருந்தது

சில மாதங்களுக்குப் பிறகு,இருவருக்கும் திருமணம் நடக்க சந்தோசமாக வாழ்க்கையைத் தொடங்கினார்கள் தினமும் காதல் அதிகரித்துக்கொண்டே போனது இன்றும் முடியாத நம்பிக்கை உள்ள காதல்