எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்
நடிகை அமலாபால் ‘ஆடை’ திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்த படம் நன்கு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் கேசிஜி வர்கீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை அமலாபால், “மண், மொழி, மக்கள் இவற்றிலிருந்து தான் அனைத்தையும் நான் கற்றுக் கொண்டேன். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன். ஆடை திரைப்படம் மனிதாபிமானம் குறித்துப் பேசியது. ஆடை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.