உத்தர் பிரதேஷ் மாநிலம் பிவாண்டியின் பத்வாட் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ராஜூ மகேந்திர சிங் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ராஜூ கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11:15 மணி அளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று காய்கறி நறுக்கும் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த பெண் மயங்கி விழும் வரை தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியில் வந்த அந்த பெண்ணின் சகோதரியையும் ராஜு கத்தியால் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.