நடைபெற்ற தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

லாட்டரி சீட்டு கொண்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் கேரளாவிலிருந்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கொண்டுவந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுரண்டை சிவகுருநாதபுரம் வசித்துவரும் முருகேசன், முருகன், மதன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ 30 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *