சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென ஏற்பட்ட பழுது…. போக்குவரத்து பாதிப்பை சரி செய்த போலீஸ்….!!

லாரியில் பழுது ஏற்பட்டு சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கர்நகர் தனியார் சிமெண்டு தொழிற்சாலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று செங்கோட்டையிலிருந்து புறப்பட்டது. இந்நிலையில் நெல்லை டவுன் கண்டியபேரி வழியாக தென்காசி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

அப்போது லாரியின் முன்பக்க சக்கரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் லாரி மேலும் செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *