எந்திர தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மேம்பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவின் மேம்பாலம் வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி தனியார் நிறுவனத்திற்கு எந்திர தளவாடங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி அப்பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வழியாக வந்த வாகனங்களை மேம்பாலத்தை சுற்றி திருப்பி விட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்த லாரியை மீட்டனர். இந்த விபத்தின் காரணமாக சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.