செங்கல் ஏற்றி சென்ற லாரி…. திடீரென நடந்த சம்பவம்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு உள்ளது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பட்டி யை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் மாற்று ஓட்டுநராக முனிராஜ் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். மேலும் சாலையில் செங்கல் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *