தாறுமாறாக ஓடிய லாரி…. சாய்ந்து விழுந்த உயர் கோபுர மின்கம்பம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பெங்களூரில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காத்தோப்பு பகுதியில் சென்ற போது விஜயின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி உயர் கோபுர மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் 60 அடி உயரமுள்ள உயர் மின் கோபுரம் மின்கம்பம் சாய்ந்து அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் விஜய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரி, சாலையில் விழுந்த மின் கம்பம் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply