“சோப்பு ஏற்றி வந்த லாரி” திடீரென நடந்த விபரீதம்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

சோப்பு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்திலிருந்து சோப்பு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தர்மபுரி அருகே வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற மற்றொரு டிப்பர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுனர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக தொப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *