டேங்கர் லாரி லாரி மோதிய விபத்தில் 2 ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து சீனிவாசன் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது கர்நாடகாவிலிருந்து டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் லாரி இரண்டும் புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் லாரிகள் அருகிலிருந்த மண் மேட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 ஓட்டுநர்களும் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.