செங்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் பள்ளத்தில் சிக்கி கொண்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, கால்வாய், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் தற்போது தார்சாலை போடப்படுகின்றது. அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிக் கற்கள் கொட்டி சமப்படுத்தி பட்டுள்ளன. இந்த வழியாக செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.
அப்போது சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு லாரியின் முன்பக்க சக்கரம் சிக்கிக்கொண்டது. இதனையடுத்து லாரியிலிருந்த செங்கற்களை தொழிலாளர்கள் கீழே இறக்கி சாலையோரம் அடுக்கி வைத்துள்ளனர். அதன் பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்திலிருந்து லாரி மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.