“முருகனை பார்த்து 1 1/2 வருடம் ஆயிடுச்சு” 5-ம் படை வீட்டில் குவிந்த பக்தர்கள்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்….!!

முருகனை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணியில் முருகனின் 5-ம் படை வீடான கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்று குறைந்ததால் கோவில் திறக்கப்பட்டுள்ளன. எனவே பக்தர்கள் கோவில்களுக்கு திரண்டு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்த முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை, தைப்பூசம் ஆகிய விசேஷ நாட்களில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர்.

இம்மாதம் மிகவும் விசேஷமான மாதங்மாக உள்ளதால் இந்த முருகன் கோவிலுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் சபரிமலை மற்றும் மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்தவர்களாக காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதிக அளவில் பக்தர்கள் திரண்டதால் 3 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். மேலும் கார்த்திகை, மார்கழி மாதம் என்பதால் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *