அதிமுக – பாமக இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இதற்கு பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு அதிமுகவுக்கு பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1996 ஆம் ஆண்டை ஜெயக்குமார் திரும்பி பார்க்க வேண்டும். 1996இல் ஜெயலலிதா பாமக அலுவலகத்தை தேடி வந்து ராமதாசுடன் கூட்டணி வைத்தார்.

பாமக தயவில் தான் ஜெயலலிதா அன்று முதலமைச்சர் ஆனார் என நாங்கள் ஒரு போதும் சொன்னதில்லை. ஜெயக்குமார் விமர்சனங்களை முன்வைக்கும்போது கவனத்துடன் பேச வேண்டும். அதிமுக பிளவு பட்டுள்ளதாக அன்புமணி கூறியதில் சாதாரண குழந்தைக்கு கூட தெரியும்.

அன்புமணி எம்பி ஆனதில் ஜெயக்குமாருக்கு என்ன பங்கு இருக்கிறது ? கூட்டணி ஒப்பந்தப்படியே அன்புமணி அதிமுக சார்பில் பதவி வழங்கப்பட்டது.ஜெயக்குமார் கருத்தை அவர்கள் தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம். 1996 அதிமுக நிலை எப்படி இருந்தது என்பதை திரும்பி பார்க்க வேண்டும் என பாமக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு எச்சரிக்கை பதில் கொடுக்கப்பட்டுள்ளது.