கடந்து வந்த 2021…. தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்…. வியப்பூட்டும் தகவல்கள்….!!!

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் 1958-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி அமெரிக்காவால் நிறுவப்பட்டது. நாசாவின் விஞ்ஞானம் புவி அமைப்பை பற்றி எடுத்துரைக்கின்றது. அதன் மூலம் பூமியை பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நாசா குழு 2021-ஆம் ஆண்டு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. அதனை நாம் பின்வருமாறு காணலாம்.

நாசா காலநிலை பூமி அறிவியல்:

2021-ஆம் ஆண்டின் காலநிலை மாற்றம், பேரிடர் தடுப்பு, காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நிகழ் நேர விவசாய செயல் முறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முயற்சிகளுக்கு புதிய புவி அமைப்பை ஆய்வு செய்வதற்கு நாசா அறிவித்தது. மேலும் 2022-க்கான கன்வெட்டிவ் அப்டிராஃப்ட்கஸ் பணியின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது வெப்பமண்டல புயல்கள் மற்றும் இடியுடன் கூடிய மழையின் நடத்தையை ஆய்வு செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

விண்வெளியில் மனிதர்கள்:

12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து 10 புதிய விண்வெளி வீரர்களை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் நாசா விண்வெளி வீராங்கனையான ரூபன் 6 மாதங்களாக விண்வெளியில் வாழ்ந்து பணியாற்றி வந்ததை தொடர்ந்து சோயுஸ் என்ற விண்கலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூமிக்கு திரும்பினார். மேலும் அறிவியல் கார்டினல் ஹார்ட் பரிசோதனை புவியீர்ப்பு மாற்றங்கள் செல்லுலார் மற்றும் திசு மட்டங்களில் இருதய செல்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை பற்றி எடுத்துரைக்கின்றது. இதனையடுத்து நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹேயின் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர் 2022-ல் பூமிக்கு திரும்பிய பிறகு அமெரிக்கர்கான நீண்ட விண்வெளி பயணத்திற்கான சாதனையை பிடிப்பார் என நாசா தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாசா விண்வெளி வீரர்களும், ரஷ்ய விண்வெளி வீரர்களும் 2010-ஆம் ஆண்டிலிருந்து 1 வருடத்தில் 13 விண்வெளி நடைகளை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் :

நாசா ஆராய்ச்சியாளர்கள் ஹைபிரிட் எலெக்ட்ரிக் விமானத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சிறிய கோர்ட் எந்திரத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த இயந்திரத்தின் மூலம் அமுக்கி மற்றும் விசையாழியின் அளவை குறைக்க முடியும். அதன் மூலம் அதே அளவு எரிபொருள்களுக்கு அதிக உந்துதல் மற்றும் மின்சார சக்தியை அடைய முடியும். எனவே இது விமான இயந்திரத்தை அதிக எரிபொருள் திறன் கொண்டதாக மாற்றுகின்றது. அதோடு நாசா ஆராய்ச்சியாளர்கள் வாகனத்தின் செயல்திறன், ஒளியியல் மற்றும் மேம்பட்ட ஏர் மொபிலிட்டி பணியின் இலக்கை அடைவதற்கு முக்கியமான தகவல் தொடர்புகளை பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் நாசாவின் முதல் முழு மின்சார விமானம் X-57 மேக்ஸ்வெல்லின் உயர் அழுத்த மின்சாரம் சோதனை முடிவடைந்தது. இதில் வாகனத்தின் மின் அமைப்புகள் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி தொழில்நுட்பம் :

சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஆய்வுகளை இயக்கக் கூடிய புதிய கருத்துக்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பூமியில் உள்ள மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாது டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட லேசர் கம்யூனிகேஷன்ஸ் டொமான்ஸ்ட்ரேஷன் மூலம் விண்வெளி தகவல் தொடர்புக்கான புதிய முன்னுதாரணத்தை ஏஜென்சி மேற்கொண்டது.

சந்திரன், செவ்வாய்:

சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கு முக்கியமான உந்து விசை மற்றும் வளிமண்டல நுழைவு தொழில்நுட்பங்களை மேம்படுத்த நாசா 2 புதிய பல்கலைக்கழகம் தலைமையிலான விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவியுள்ளது. இதில் ஸ்பேஸ் டெக்னாலஜி மிஷன் மூலம் சந்திரனில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. மேலும் உலோக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளை ஆராய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *