பார்த்து பேசுங்க…! இல்லனா தெருவுல நடமாட முடியாது…. ராகுல் காந்தியை எச்சரித்த முதல்வர் ஏக்நாத் ஷண்டே…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷண்டே சட்டசபையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது குறித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது, ராகுல் காந்தி மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் பிரதமர் மோடியை மட்டும் இன்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் அவமதித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சவார்கர் ஒரு ரோல் மாடல் மாதிரி. அவரை ராகுல் காந்தி அவமதித்தது கண்டிக்கத்தக்கது. மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் சவார்க்கர் இல்லை என்று கூறியுள்ளார். சவர்க்கரை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. சவார்க்கரை அவமதித்த ராகுல் காந்தியை உத்தர் தாக்கரே தரப்பு ஆதரிப்பது துரதிஷ்டவசமானது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காவலாளியே திருடன் என ராகுல் காந்தி பேசியதால் அவருக்கு தோல்வி மூலம் மக்கள் பாடத்தை கற்றுக் கொடுத்தார்கள். வெளிநாட்டில் ஜனநாயகம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பேசியதோடு பாரத் ஜோடா என்ற யாத்திரை மூலம் இந்தியாவை துண்டாட நினைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட சட்டதால்தான் தற்போது ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள். மேலும் சவர்க்கரை பற்றி ராகுல் காந்தி தொடர்ந்து இப்படி பேசினால் அவர் தெருவில் நடமாட முடியாது என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறினார்.