“தாத்தா-பாட்டியுடன் தனிமை” கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…… கடலூரில் சோகம்….!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது  மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இரண்டாவது மகள் தனலட்சுமி வேப்பூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அக்கா மற்றும் தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து வர வேப்பூரில் உள்ள தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த தனலட்சுமி நேற்று மாலை தாத்தா-பாட்டி வயலுக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் தந்தைக்கு தகவல் அளித்தனர். பின் அவர் அளித்த புகாரின் பேரில் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *