”பாஜகவின் ஒரு கை அதிமுக” மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம்…!!

பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார்

நீலகிரியில் பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முற்றிலுமாக சேதாரம் அடைந்துள்ளது.நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அரசு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் ,  பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக அரசு தமிழகம் பாதிக்கப்பட்ட இந்த சூழலிலாவது மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார்.