மக்களவை 69.55% , இடைத்தேர்தல் 71.62% வாக்குப்பதிவு…… 6 மணி வரை நிலவரம் வெளியீடு…!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு   69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62%  பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த  புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மதுரை மக்களவை  தொகுதிக்கு மட்டும் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு நேரம் கூடுதலாக இரண்டு மணி நேரம் நீட்டித்து நடைபெற்று வருகின்றது.

மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகின்ற சூழலில் , சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தெரிவித்தார். அதில் இன்னும் சில வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. முழுமையாக வாக்குப்பதிவு வந்ததும் தகவல் தெரிவிக்கப்படும். தமிழகம் முழுவது மாலை 6 மணி நிலவரப்படி மொத்தமாக  சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் , மக்களவை தேர்தலில்  69.55% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.